ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மோதும் டி20 போட்டியை கண்டு ரசித்த இந்திய அணி வீரர்கள்
|இது தொடர்பான புகைப்படத்தை அஸ்வின் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்
பெர்த்,
நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து உள்பட 16 அணிகள் பங்கேற்கும் 8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் வருகிற 16-ந்தேதி முதல் நவம்பர் 13-ந்தேதி வரை நடக்கிறது. இதில் நேரடியாக சூப்பர்12 சுற்றில் கால்பதிக்கும் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் வருகிற 23-ந்தேதி பாகிஸ்தானுடன் மெல்போர்னில் பலப்பரீட்சை நடத்துகிறது.
இதையடுத்து உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் மும்பையில் இருந்து விமானம் மூலம் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகருக்கு சென்றனர்.பெர்த்-ல் உள்ள ஒரு மைதானத்தில் இந்திய அணி வீரர்கள் தொடர்நது தீவிர பயிற்சயில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஆஸ்திரேலியா -இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று பெர்த்-ல் நடைபெற்று வருகிறது.இந்த போட்டியை இந்திய அணி வீரர்கள் நேரில் கண்டு ரசித்தனர்.அஸ்வின் ,ஹர்ஷல் படேல் ,சாஹல் ,தினேஷ் கார்த்திக் ஆகிய இந்திய அணி வீரர்கள் ,போட்டியை கண்டு ரசித்தனர்.
இது தொடர்பான புகைப்படத்தை அஸ்வின் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது