< Back
கிரிக்கெட்
டி 20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி வரும் 28ம் தேதி தேர்வு...? - வெளியான தகவல்

image courtesy; ANI

கிரிக்கெட்

டி 20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி வரும் 28ம் தேதி தேர்வு...? - வெளியான தகவல்

தினத்தந்தி
|
20 April 2024 5:51 PM IST

20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை தொடர் வரும் ஜூன் 1ம் தேதி தொடங்குகிறது.

புதுடெல்லி,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன.

இந்த ஐ.பி.எல் தொடர் நிறைவடைந்ததும் வரும் ஜூன் 1ம் தேதி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் தொடங்குகிறது. இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.

இந்த தொடருக்கான இந்திய அணியில் ஐ.பி.எல் தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி வரும் 28ம் தேதி தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வரும் 27ம் தேதி டெல்லி கேப்பிடல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் புதுடெல்லியில் நடைபெறுகிறது. இந்த ஆட்டம் முடிந்த பின்னர் வரும் 28ம் தேதி இந்திய தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர், இந்திய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் தேர்வு குழு உறுப்பினர்கள் இணைந்து இந்திய அணியை தேர்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்