< Back
கிரிக்கெட்
உலக   டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிய இந்திய அணி..!

Image Courtesy : ICC Twitter

கிரிக்கெட்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிய இந்திய அணி..!

தினத்தந்தி
|
18 Dec 2023 10:35 AM IST

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிராக தனது தொடக்க தொடரை ஆடியது.

துபாய்,

2023-2025ம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரிலிருந்து தொடங்கியது. இதில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிராக தனது தொடக்க தொடரை ஆடியது.

2 போட்டிகள் கொண்ட அந்த தொடரை 1-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. 1 போட்டி டிரா ஆனது. அதன் பின்னர் இந்திய அணி தற்போது வரை எந்த டெஸ்ட் தொடரிலும் ஆடவில்லை.

இந்நிலையில் பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று முடிவடைந்தது. அதில் பாகிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியாவின் வெற்றியால் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 66.67 புள்ளிகளுடன் இந்தியா முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. அதே 66.67 புள்ளிகளை கொண்டிருந்தாலும் 3 போட்டிகளில் விளையாடி அதில் 1 தோல்வியை பதிவு செய்ததால் பாகிஸ்தான் 2வது இடத்திற்கு சரிந்துள்ளது. ஆஸ்திரேலியா 41.67 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்