< Back
கிரிக்கெட்
தோனி தலைமையில் கனவு அணியை தேர்வு செய்த பாக்.முன்னாள் வீரர்... ரோகித், பும்ராவுக்கு இடமில்லை
கிரிக்கெட்

தோனி தலைமையில் கனவு அணியை தேர்வு செய்த பாக்.முன்னாள் வீரர்... ரோகித், பும்ராவுக்கு இடமில்லை

தினத்தந்தி
|
18 Aug 2024 1:29 AM IST

பாசித் அலி சிறந்த 11 வீரர்களை கொண்ட உலக கனவு அணியை தேர்ந்தெடுத்துள்ளார்.

லாகூர்,

நூற்றாண்டை தாண்டி நடைபெற்று வரும் கிரிக்கெட் விளையாட்டில் பல்வேறு மகத்தான ஜாம்பவான் வீரர்கள் விளையாடி ஏராளமான சாதனைகள் படைத்துள்ளனர். அவர்களை வைத்து சிறந்த 11 வீரர்களைக் கொண்ட கனவு அணியை பலரும் தேர்வு செய்வது வழக்கமாகும்.

அந்த வகையில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாசித் அலி தம்முடைய சிறந்த 11 வீரர்களை கொண்ட உலக கனவு அணியை தேர்ந்தெடுத்துள்ளார். அந்த அணிக்கு 3 விதமான ஐசிசி வெள்ளைப்பந்து கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக உலக சாதனை படைத்த இந்தியாவின் மகேந்திரசிங் தோனியை அவர் கேப்டனாக தேர்ந்தெடுத்துள்ளார். அவருடைய அணியில் இந்தியாவிலிருந்து வீரேந்திர சேவாக், சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி ஆகியோர் தேர்வாகியுள்ளனர். மேலும் முத்தையா முரளிதரனை அவர் 12வது வீரராக தேர்ந்தெடுத்துள்ளார்.

பாசித் அலியின் கனவு அணி விவரம் பின்வருமாறு:-

1.வீரேந்திர சேவாக்

2.அலெஸ்டர் குக்

3.பிரையன் லாரா

4.சச்சின் டெண்டுல்கர்

5.குமார் சங்ககாரா அல்லது விராட் கோலி

6.ஜாக் காலிஸ்

7.எம்எஸ் தோனி (கேப்டன்)

8.வாசிம் அக்ரம்

9.மால்கோம் மார்சல்

10.கிளென் மெக்ராத்

11.ஷேன் வார்னே

12வது வீரர் : முத்தையா முரளிதரன்

மேலும் செய்திகள்