< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் நாளை தொடக்கம்
|9 July 2024 9:46 PM IST
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் நாளை தொடங்க உள்ளது.
லண்டன்,
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் ஆகும். இந்த தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி கிரேக் பிராத்வைட் தலைமையிலும், இங்கிலாந்து அணி பென் ஸ்டோக்ஸ் தலைமையிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் என்பதால் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும். இதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது.
டெஸ்ட் தொடர் அட்டவணை விவரம்:
முதல் டெஸ்ட்: ஜூலை 10-14 - லண்டன்
2வது டெஸ்ட்: ஜூலை 18-22 - நாட்டிங்ஹாம்
3வது டெஸ்ட்: ஜூலை 26-30 - பர்மிங்ஹாம்.