< Back
கிரிக்கெட்
முதலாவது டி20; பிளேயிங் லெவனில் ஜெய்ஸ்வால் ஏன் இடம்பெறவில்லை? ரோகித் கூறிய விளக்கம்
கிரிக்கெட்

முதலாவது டி20; பிளேயிங் லெவனில் ஜெய்ஸ்வால் ஏன் இடம்பெறவில்லை? ரோகித் கூறிய விளக்கம்

தினத்தந்தி
|
11 Jan 2024 8:06 PM IST

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

மொகாலி,

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

பின்னர் இந்திய அணியின் பிளேயிங் 11-ஐ ரோகித் சர்மா அறிவிக்கும்போது அதில் ஜெய்ஸ்வால் பெயர் இடம்பெறவில்லை. கோலி இல்லாத சுழலில் ரோகித் சர்மாவுடன் ஜெய்ஸ்வால் தொடக்க ஆட்டக்காரராகவும், கோலி இடத்தில் கில் விளையாடுவார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஜெய்ஸ்வால் அணியில் இடம்பெறாதது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் முதல் டி20 போட்டியில் ஜெய்ஸ்வால் காயம் காரணமாகதான் அணியில் இடம்பெறவில்லை என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா விளக்கமளித்துள்ளார்.

மேலும் செய்திகள்