< Back
கிரிக்கெட்
இங்கிலாந்து - இலங்கை இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்

Image Courtesy: AFP

கிரிக்கெட்

இங்கிலாந்து - இலங்கை இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்

தினத்தந்தி
|
6 Sept 2024 11:35 AM IST

இங்கிலாந்து-இலங்கை இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது.

லண்டன்,

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்று 2-0 என தொடரை ஏற்கனவே கைப்பற்றிவிட்டது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவலில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் சில தினங்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

இந்த போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்ற இங்கிலாந்து முயற்சிக்கும். அதேவேளையில் இந்த போட்டியில் ஆறுதல் வெற்றி பெற இலங்கை கடுமையாக போராடும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது.

கடைசி டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து ஆடும் லெவன் விவரம்;

டேனியல் லாரன்ஸ், பென் டக்கட், ஆலி போப் (கேப்டன்), ஜோ ரூட், ஹாரி புரூக், ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்), கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், ஆலி ஸ்டோன், ஜோஷ் ஹல், ஷோயப் பஷீர்.

கடைசி டெஸ்ட் போட்டிக்கான இலங்கை ஆடும் லெவன் விவரம்;

திமுத் கருணாரத்னே, பதும் நிசாங்கா, குசல் மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ், தினேஷ் சண்டிமால் (விக்கெட் கீப்பர்), தனஞ்செயா டி சில்வா (கேப்டன்), காமிந்து மெண்டிஸ், மிலன் ரத்னநாயக்கே, விஷ்வா பெர்ணாண்டோ, லஹிரு குமாரா, அஷிதா பெர்ணாண்டோ.

மேலும் செய்திகள்