< Back
கிரிக்கெட்
ஐ.பி.எல் தொடரில் அதிக கேட்ச்சுகள் பிடித்த  பீல்டர்...ரெய்னாவை பின்னுக்கு தள்ளி வரலாற்று சாதனை படைத்த கோலி

Image Courtesy: AFP

கிரிக்கெட்

ஐ.பி.எல் தொடரில் அதிக கேட்ச்சுகள் பிடித்த பீல்டர்...ரெய்னாவை பின்னுக்கு தள்ளி வரலாற்று சாதனை படைத்த கோலி

தினத்தந்தி
|
7 April 2024 7:55 AM IST

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த

ஜெய்ப்பூர்,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 183 ரன்கள் எடுத்தது. பெங்களூரு தரப்பில் விராட் கோலி 72 பந்தில் 113 ரன்கள் அடித்தார். இதையடுத்து 184 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ராஜஸ்தான் அணி 19.1 ஓவரில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 189 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ராஜஸ்தான் தரப்பில் அதிரடியாக ஆடிய பட்லர் 58 பந்தில் 100 ரன்னும், சஞ்சு சாம்சன் 42 பந்தில் 69 ரன்னும் எடுத்தனர். இந்நிலையில் இந்த ஆட்டத்தில் விராட் கோலி ஒரு கேட்ச் பிடித்தார். இந்த கேட்ச்சின் மூலம் ஐ.பி.எல் வரலாற்றில் அதிக கேட்ச்சுகள் பிடித்த பீல்டர் பட்டியலில் ரெய்னாவை பின்னுக்கு தள்ளி விராட் கோலி முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளார்.

இதற்கு முன் 109 கேட்ச்சுகளை பிடித்து ரெய்னாவுடன் முதல் இடத்தை பகிர்ந்து கொண்டிருந்த கோலி நேற்றைய ஆட்டத்தில் ஒரு கேட்ச் பிடித்ததன் மூலம் ஐ.பி.எல் தொடரில் அதிக கேட்ச்சுகள் பிடித்த பீல்டர் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளார்.

ஐ.பி.எல். தொடரில் ஒரு பீல்டரின் அதிக கேட்ச்சுகள் விவரம்;

விராட் கோலி - 110

சுரேஷ் ரெய்னா - 109

கைரன் பொல்லார்ட் - 103

ரோகித் சர்மா - 99

ஷிகர் தவான் - 98

ரவீந்திர ஜடேஜா - 98

மேலும் செய்திகள்