களத்துக்குள் ஓடிவந்த ரசிகர்...ரோகித் சர்மா கொடுத்த ரியாக்ஷன் - வைரலாகும் வீடியோ
|ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற 14-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
மும்பை,
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற 14-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை 20 ஓவர்களில் 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக பாண்ட்யா 34 ரன்கள் எடுத்தார்.
ராஜஸ்தான் தரப்பில் பவுல்ட், சஹால் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து 126 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆடிய ராஜஸ்தான் 15.3 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 127 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ரியான் பராக் 54 ரன்கள் எடுத்தார்
இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது ரசிகர் ஒருவர் மைதானத்துக்குள் நுழைந்து ரோகித் சர்மாவை நோக்கி சென்றார். அப்போது பீல்டிங் சரி செய்து கொண்டிருந்த ரோகித் இதனை சற்றும் எதிர்பாராதால் திடுக்கிட்டார்.
அதன்பிறகு ரோகித் சர்மாவை கட்டியணைத்து ரசிகர் தனது அன்பை வெளிப்படுத்தினார். பின்னர் கீப்பர் நின்ற இஷான் கிஷனை கட்டியணைத்து சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரோகித் சர்மா பயந்ததை ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.