ஐசிசி டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் 2ம் இடத்திற்கு முன்னேறிய இங்கிலாந்து வீரர்..!
|சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஆண்கள் கிரிக்கெட்டுக்கான டி20 தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.
துபாய்,
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஆண்கள் கிரிக்கெட்டுக்கான டி20 தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் டி20 தரவரிசையில் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.
அதன்படி பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட இங்கிலாந்து பேட்ஸ்மேன் பில் சால்ட் பேட்டிங் தரவரிசையில் 2ம் இடத்திற்கு முன்னேறி உள்ளார். இந்த தரவரிசையில் சூர்யகுமார் யாதவ் முதல் இடத்திலும், முகமது ரிஸ்வான் 3ம் இடத்திலும் உள்ளனர். இந்திய பேட்ஸ்மேன் கெய்க்வாட் 8ம் இடத்தில் உள்ளார்.
பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் அடில் ரஷித் முதல் இடத்திலும், ரஷித் கான் 2ம் இடத்திலும், ரவி பிஷ்னோய் 3ம் இடத்திலும் உள்ளனர். டி20 ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் ஷகிப் அல் ஹசன் முதல் இடத்திலும், முகமது நபி 2ம் இடத்திலும், எய்டன் மார்க்ரம் 3ம் இடத்திலும், ஹர்திக் பாண்ட்யா 4ம் இடத்திலும் உள்ளனர்.