< Back
கிரிக்கெட்
சச்சினின் வரலாற்று சாதனையை முறியடித்து புதிய சரித்திரம் படைத்த இங்கிலாந்து வீரர்
கிரிக்கெட்

சச்சினின் வரலாற்று சாதனையை முறியடித்து புதிய சரித்திரம் படைத்த இங்கிலாந்து வீரர்

தினத்தந்தி
|
25 Jan 2024 3:46 PM IST

இந்தியாவுக்கு எதிராக முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 246 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

ஐதராபாத்,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 246 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 70 ரன்கள் அடித்தார். இதனையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது.

முன்னதாக இங்கிலாந்தின் முதல் இன்னிங்சில் அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஜோ ரூட் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி 29 ரன்கள் அடித்தார். இதன் மூலம் இந்தியாவுக்கு எதிராக தன்னுடைய கெரியரில் டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 2555 ரன்களை குவித்துள்ளார்.

இதன் வாயிலாக வரலாற்றில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சச்சினின் ஆல் டைம் சாதனையை உடைத்துள்ள ஜோ ரூட் புதிய சரித்திரம் படைத்துள்ளார்.

அந்த பட்டியல்:

1. ஜோ ரூட் : 2555

2. சச்சின் : 2535

3. சுனில் கவாஸ்கர் : 2483

4. அலெஸ்டர் குக் : 2431

5. விராட் கோலி : 1991

மேலும் செய்திகள்