சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த நெதர்லாந்து வீரர்
|சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் கடந்த 16ம் தேதி நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் ஆடினார்.
செயின்ட் லூசியா,
நெதர்லாந்து அணியின் ஆல்-ரவுண்டர் சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட். இவர் நெதர்லாந்து அணிக்காக 12 ஒருநாள், 12 இருபது ஓவர் போட்டியில் விளையாடி உள்ளார். நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் நெதர்லாந்து அணியில் இடம் பிடித்திருந்த சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் கடந்த 16ம் தேதி நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் ஆடினார்.
இந்நிலையில் நடைபெற்று முடிந்த இலங்கைக்கு எதிரான ஆட்டத்துடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் அறிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த சைப்ரண்ட் முதலில் தனது சொந்த நாட்டு அணிக்காக (தென் ஆப்பிரிக்கா) 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டியில் விளையாடி இருக்கிறார். 2021-ம் ஆண்டு நெதர்லாந்துக்கு இடம் பெயர்ந்த அவர் 2023-ம் ஆண்டில் இருந்து நெதர்லாந்து அணிக்காக விளையாடி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.