சச்சின் தெண்டுல்கரின் 14 ஆண்டு கால சாதனையை முறியடித்த வங்காளதேச வீரர்...!
|வங்காளதேச கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
வெலிங்டன்,
வங்காளதேச கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றிருந்தது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் 49.5 ஓவர்களில் 291 ரன்களில் 'ஆல்-அவுட்' ஆனது. வங்காளதேச அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் சவுமியா சர்கார் 169 ரன்கள் அடித்தார்.
இதன்மூலம் நியூசிலாந்து மண்ணில் ஒருநாள் போட்டிகளில் ஒரு ஆட்டத்தில் அதிக ரன் குவித்த ஆசிய வீரர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன்பு 2009ஆம் ஆண்டு நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய முன்னாள் வீரர் சச்சின் தெண்டுல்கர் 163 ரன்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது. அந்த 14 ஆண்டு கால சாதனையை வங்காளதேச வீரர் சர்கார் நேற்று முறியடித்து புதிய சாதனை படைத்தார்.
இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.