டெஸ்ட் தொடர் தொடங்கும் முன்பே வார்த்தையால் சீண்டிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்
|இந்தியா- ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் தொடங்கும் முன்பே வார்த்தைகளால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வம்புக்கு இழுத்துள்ளது.
சிட்னி,
இந்தியா- ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் தொடங்கும் முன்பே வார்த்தைகளால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வம்புக்கு இழுத்துள்ளது. 2020-21-ம் ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்று விளையாடிய போது அடிலெய்டில் நடந்த பகல்-இரவு டெஸ்டில் 2-வது இன்னிங்சில் வெறும் 36 ரன்னில் சுருண்டு மோசமான தோல்வியை தழுவியது. என்றாலும் அதன் பிறகு எழுச்சி பெற்ற இந்தியா தொடரை 2-1 என்ற கணக்கில் சொந்தமாக்கி வரலாறு படைத்தது.
இந்த நிலையில் இதை மையப்படுத்தி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தனது டுவிட்டரில், '36-க்கு ஆல்-அவுட்.... பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடர் வியாழக்கிழமை தொடக்கம்' என்று குறிப்பிட்டு வார்த்தையால் சீண்டியுள்ளது. அத்துடன் 36 ரன்னில் ஆட்டமிழந்த போட்டிக்குரிய வீடியோவையும் பதிவேற்றம் செய்துள்ளது.
இதற்கு சுடச்சுட பதிலடி கொடுத்துள்ள இந்திய முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா, 'அந்த தொடரை வென்றது யார் என்று சொல்லவில்லையே' என்று கேட்டுள்ளார்.