கிரிக்கெட்
அவர் கூறிய அட்வைஸ்தான் ஸ்பின்னர்களை சிறப்பாக எதிர்கொள்ள உதவியது - ரிஷப் பண்ட்

image courtesy: AFP

கிரிக்கெட்

அவர் கூறிய அட்வைஸ்தான் ஸ்பின்னர்களை சிறப்பாக எதிர்கொள்ள உதவியது - ரிஷப் பண்ட்

தினத்தந்தி
|
9 Sep 2024 9:54 AM GMT

ஆரம்ப காலங்களில் தாமும் ஆப் ஸ்பின்னர்களுக்கு எதிராக தடுமாறியதாக ரிஷப் பண்ட் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட், டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். முன்னதாக ரிஷப் பண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்பின்னர்களை அதிரடியாக எதிர்கொண்டு ரன்கள் குவிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

குறிப்பாக ஆஸ்திரேலியாவின் நாதன் லயன் 500க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்து சிறந்த ஸ்பின்னராக உள்ளார். ஆனால் அவரை 2021 சிட்னி, காபா டெஸ்ட் போட்டிகளில் அதிரடியாக எதிர்கொண்ட ரிஷப் பண்ட் பலரையும் ஆச்சரியப்படுத்தினார்.

இந்நிலையில் ஆரம்ப காலங்களில் தாமும் ஆப் ஸ்பின்னர்களுக்கு எதிராக தடுமாற்றமாக விளையாடி அவுட்டானதாக ரிஷப் பண்ட் கூறியுள்ளார். அப்போது முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அதிரடியான ஷாட்டுகளை அடித்தால் மட்டுமே ஆப் ஸ்பின்னர்களை நன்றாக எதிர்கொள்ள முடியும் என்று ஆலோசனை கொடுத்ததாக ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:- "ரவி சாஸ்திரியுடன் எனக்கு சிறப்பான புரிதல் இருந்தது. அவர் எனக்கு நான் விரும்பும் சுதந்திரத்தை கொடுத்தார். பொதுவாக குறிப்பிட்ட விஷயத்தை செய்யாதீர்கள் என்று ஒருவர் சொல்வது எனக்கு பிடிக்காது. அதற்கு பதிலாக சிறந்த ஆப்ஷனை கொடுப்பவர்களை விரும்புவேன். நான் எதையும் தவிர்ப்பதை விட சிறந்த விருப்பத்திற்கு மாற விரும்புகிறேன்.

ஒரு காலத்தில் ஆப் ஸ்பின்னர்களுக்கு எதிராக ஷாட்டுகளை அடிக்கும்போது நான் அவுட்டாகி விடுவேன். அப்போது ரவி சாஸ்திரி பாய் என்னிடம் ஆப் ஸ்பின்னர்களை அதிரடியாக எதிர்கொள்ள நாம் வழியை கண்டறிய வேண்டும் என்று சொன்னார். அதற்காக நீங்கள் ஆப் ஸ்பின்னர்களுக்கு எதிராக ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்டுகளை அடிக்க வேண்டும் என்று அவர் என்னிடம் சொன்னார்" எனக் கூறினார்.

மேலும் செய்திகள்