< Back
கிரிக்கெட்
இலங்கை-ஆஸ்திரேலியா 5-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி - கொழும்புவில் இன்று நடக்கிறது
கிரிக்கெட்

இலங்கை-ஆஸ்திரேலியா 5-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி - கொழும்புவில் இன்று நடக்கிறது

தினத்தந்தி
|
24 Jun 2022 6:23 AM IST

ஏற்கனவே தொடரை இழந்துவிட்ட ஆஸ்திரேலிய அணி ஆறுதல் வெற்றிக்காக இன்று களம் இறங்குகிறது.

கொழும்பு,

இலங்கை-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் இன்று நடக்கிறது. ஏற்கனவே தொடரை 1-3 என்ற கணக்கில் இழந்து விட்ட ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி ஆறுதல் வெற்றிக்காக களம் இறங்குகிறது.

தசைப்பிடிப்பால் அவதிப்படும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட் ஆடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே, இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடும் ஆஸ்திரேலிய அணியில் கூடுதலாக ஆல்-ரவுண்டர் மேக்ஸ்வெல் சேர்க்கப்பட்டுள்ளார். இன்று பிற்பகல் 2.30 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது.

மேலும் செய்திகள்