< Back
கிரிக்கெட்
இந்தியா - இங்கிலாந்து இடையேயான 3வது டெஸ்ட் நாளை தொடக்கம்
கிரிக்கெட்

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 3வது டெஸ்ட் நாளை தொடக்கம்

தினத்தந்தி
|
14 Feb 2024 12:23 PM IST

இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

ராஜ்கோட்,

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2 போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றுள்ளன. தொடர் 1-1 என சமனில் இருக்கிறது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 3வது டெஸ்ட் போட்டி நாளை ராஜ்கோட்டில் தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

காயத்தில் இருந்து மீளாததால் இந்திய முன்னணி பேட்ஸ்மேன் லோகேஷ் ராகுல் இந்த போட்டியில் இருந்து விலகி விட்டார். மோசமான பார்ம் காரணமாக ஷ்ரேயாஸ் அய்யர் இந்த போட்டிக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்படவில்லை .

இந்த டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற இந்திய அணி தீவிரம் காட்டும். 2வது டெஸ்ட் தோல்விக்கு பதிலடி கொடுக்க இங்கிலாந்து அணி போராடும்.

இந்திய நேரப்படி நாளை காலை 9.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.

மேலும் செய்திகள்