< Back
கிரிக்கெட்
நியூசிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான  2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்
கிரிக்கெட்

நியூசிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்

தினத்தந்தி
|
8 March 2024 3:40 AM IST

நியூசிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் இன்று தொடங்குகிறது.

கிறைஸ்ட்சர்ச்,

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதில் வெலிங்டனில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 172 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் நியூசிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் இன்று தொடங்குகிறது. கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி தனது ஆதிக்கத்தை தொடர்ந்து தொடரை கைப்பற்ற தீவிரம் காட்டும். அதேநேரத்தில் டிம் சவுதி தலைமையிலான நியூசிலாந்து அணி முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கவும், 1993-ம் ஆண்டுக்கு பிறகு சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதில்லை என்ற சோகத்துக்கு முடிவு கட்டவும் முழுமையாக போராடும். எனவே ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

நியூசிலாந்து அணியின் கேப்டன் டிம் சவுதி, முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் ஆகியோருக்கு இது 100-வது டெஸ்ட் என்ற வகையில் இந்த போட்டி முக்கியத்துவம் பெறுகிறது

மேலும் செய்திகள்