< Back
கிரிக்கெட்
நடப்பு உலகக்கோப்பை தொடரில் 2வது சிறந்த ஆசிய அணி... ஆப்கானிஸ்தானை பாராட்டிய இந்திய முன்னாள் வீரர்...!

Image Courtesy: AFP

கிரிக்கெட்

நடப்பு உலகக்கோப்பை தொடரில் 2வது சிறந்த ஆசிய அணி... ஆப்கானிஸ்தானை பாராட்டிய இந்திய முன்னாள் வீரர்...!

தினத்தந்தி
|
11 Nov 2023 8:43 AM IST

இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

அகமதாபாத்,

இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் இதுவரை நடந்த லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள ஒரு அரையிறுதி இடத்திற்கு நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது.

இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை மிகப்பெரிய (ரன்கள் அடிப்படையில்) வித்தியாசத்தில் வீழ்த்தினால் தங்களுக்கு அரையிறுதி வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலையில் ஆடிய ஆப்கானிஸ்தான் தோல்வியை தழுவி அரையிறுதிக்கு தகுதி பெறாமல் வெளியேறியது.

இந்நிலையில் நடப்பு உலகக்கோப்பை தொடரில் 2வது சிறந்த ஆசிய அணி ஆப்கானிஸ்தான் அணிதான் என இந்திய முன்னாள் வீரர் இர்பான் பதான் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

இந்த உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் தரமான கிரிக்கெட்டை வெளிப்படுத்தியது. நிச்சயமாக இந்த தொடரில் இரண்டாவது சிறந்த ஆசிய அணி ஆப்கானிஸ்தான் அணிதான். இங்கிருந்து இந்த அணி களத்தில் மேஜிக் செய்யும் என்று நம்புகிறேன். முன்னேற வாழ்த்துகள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்