< Back
கிரிக்கெட்
நமது பேட்ஸ்மேன்களிடம் அந்த திறமை காணாமல் போய்விட்டது - இந்திய முன்னாள் வீரர் வேதனை
கிரிக்கெட்

நமது பேட்ஸ்மேன்களிடம் அந்த திறமை காணாமல் போய்விட்டது - இந்திய முன்னாள் வீரர் வேதனை

தினத்தந்தி
|
6 Aug 2024 7:16 AM IST

ஒரு காலத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் சுழல் பந்துகளை சிறப்பாக எதிர்கொள்வார்கள் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி தற்போது இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி சமனில் முடிவடைந்த நிலையில், 2-வது போட்டியில் இலங்கை வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது.

முன்னதாக இந்த தொடரில் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் தடுமாறி வரும் நிலையில், ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 2 போட்டிகளிலும் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார். ரோகித்தை தவிர்த்து விராட் கோலி உட்பட மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் இலங்கையின் தரமான சுழல் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் இந்தியாவிற்கு தோல்வியை கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் ஒரு காலத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் தரமான சுழல் பந்துகளை சிறப்பாக எதிர்கொள்வார்கள் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இந்திய பேட்ஸ்மேன்களிடம் தற்போது அந்தத் திறமை காணாமல் போய்விட்டதாகவும் அவர் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு:- "சுழலுக்கு சாதகமான பிட்ச்சில் சுழலை எதிர்த்து விளையாடும் அணித்தேர்வில் அடிக்கடி நாம் தவறி வருகிறோம். ஒரு காலத்தில் அது நம்முடைய பலமாக இருந்தது. ஆனால் இனி இருக்க போவதில்லை" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்