< Back
கிரிக்கெட்
பேட்டுடன் சேர்த்து அந்த பரிசு கொடுத்ததுக்கு நன்றி விராட் பையா - ரிங்கு சிங் நெகிழ்ச்சி
கிரிக்கெட்

பேட்டுடன் சேர்த்து அந்த பரிசு கொடுத்ததுக்கு நன்றி விராட் பையா - ரிங்கு சிங் நெகிழ்ச்சி

தினத்தந்தி
|
31 March 2024 7:16 AM IST

ஐ.பி.எல் தொடரில் நேற்று முன் தினம் நடைபெற்ற 10-வது லீக் ஆட்டத்தில் ஆர்.பி.சி - கே.கே. ஆர் அணிகள் மோதின.

பெங்களூரு,

ஐ.பி.எல் தொடரில் பெங்களூருவில் நேற்று முன் தினம் நடைபெற்ற 10-வது லீக் ஆட்டத்தில் ஆர்.பி.சி - கே.கே. ஆர் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய பெங்களூரு 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது. பெங்களூர் தரப்பில் விராட் கோலி 59 பந்தில் 83 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து 183 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய கொல்கத்தா நரைன், பில் சால்ட், வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் அதிரடியின் மூலம் 16.5 ஓவர்களிலேயே 3 விக்கெட்டை மட்டும் இழந்து 186 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

இந்நிலையில் விராட் கோலி மெதுவாக விளையாடியதே பெங்களூரு தோல்வியை சந்திப்பதற்கு காரணமாக அமைந்ததாக ஒரு தரப்பு ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த போட்டி முடிந்தவுடன் கொல்கத்தா அணியின் அதிரடி ஆட்டக்காரரான ரிங்கு சிங்கிற்கு பெங்களூரு நட்சத்திர வீரர் விராட் கோலி பேட் பரிசளித்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இதையடுத்து பேட்டையும் சேர்த்து விராட் கோலி தமக்கு விலைமதிப்பில்லாத சில ஆலோசனைகளையும் கொடுத்ததாக ரிங்கு சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளியிட்ட பதிவில், பேட்டுக்காகவும் ஆலோசனைக்காகவும் மிகவும் நன்றி பையா. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த ஸ்டோரி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்