குணமடைய வேண்டிக்கொண்ட அனைவருக்கும் நன்றி - மயங்க் அகர்வால்
|விமானப் பயணத்தின்போது ஏற்பட்ட திடீர் உடல் நல குறைவு காரணமாக இந்திய கிரிக்கெட் வீரர் மயங்க் அகர்வால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அகர்தலா,
இந்திய கிரிக்கெட் வீரரான மயங்க் அகர்வால், தற்போது நடைபெற்று வரும் ரஞ்சி கிரிக்கெட் தொடரில் கர்நாடக அணியின் கேப்டனாகச் செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில், திரிபுரா அணிக்கு எதிராக வெற்றிபெற்ற பிறகு, தன் அணியினருடன் அகர்தலாவில் இருந்து குஜராத் மாநிலம் சூரத் செல்ல இன்று விமானத்தில் பயணித்துள்ளார்.
அப்போது விமானத்தில் குடிநீர் கொண்டு வருமாறு கேட்க, அதனை குடித்த சிறிது நேரத்திலேயே தொண்டை மற்றும் நாவில் எரிச்சல் ஏற்பட்டுள்ளது.தன்பின் விமான பணிப்பெண்ணிடம் விஷயத்தை கூற, உடனடியாக விமானம் தரையிறக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்ற பின், மயங்க் அகர்வால் தண்ணீருக்கு பதிலாக ஆசிட்டை குடித்தது தெரிய வந்தது. இதையடுத்து ஐசியூ-வில் அனுமதிக்கப்பட்ட அவர், அபாய கட்டத்தை கடந்துள்ளார்.
இந்நிலையில், தான் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அகர்வால் அதில்,'நான் இப்போது நன்றாக உணர்கிறேன். மீண்டு வர தயாராகி வருகிறேன். குணமடைய வேண்டிக்கொண்ட அனைவருக்கும் நன்றி. பிரார்த்தனைக்கும், அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி, அனைவருக்கும்' என்று பதிவிட்டுள்ளார்.