சென்னை அணி நிர்வாகத்திற்கு நன்றி - ராஜஸ்தானை வீழ்த்திய பின் ஆட்ட நாயகன் சிமர்ஜீத் சிங்
|ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சிமர்ஜீத் சிங் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
சென்னை,
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ராஜ்ஸ்தான் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் அடித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ரியான் பராக் 47 ரன்கள் அடித்தார். ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக சிமர்ஜீத் சிங் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 142 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 18.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக கெய்க்வாட் 42 ரன்கள் அடித்தார். ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக அஸ்வின் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். சென்னை அணியின் இந்த வெற்றிக்கு 3 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய சிமர்ஜீத் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் கடந்த வருடம் காயத்தை சந்தித்தபோது மிகவும் அக்கறையுடன் சிகிச்சைக்கு உதவிய சி.எஸ்.கே. அணி நிர்வாகம் மற்றும் பயிற்சியாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக சிமர்ஜீத் கூறியுள்ளார். மேலும் பிட்ச்சை பார்த்து கேப்டனுடன் சேர்ந்து திட்டம் வகுத்ததாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு:-
"சி.எஸ்.கே. அணி நிர்வாகம் உடற்பயிற்சியாளர்கள் மற்றும் என்னுடைய பயிற்சியாளருக்கு மிகவும் நன்றி. கடந்த வருடம் நான் காயத்தை சந்தித்தபோது மொத்த வருடமும் அவர்கள் என்னை நன்றாக நடத்தினார்கள். பிட்ச் எப்படி இருக்கிறது என்பதை பார்த்த பின் கேப்டன் முடிவு செய்தார். நாங்கள் எங்களுடைய திட்டத்தில் நின்றோம். மிடில் ஓவர்களில் பந்து வீசுவதற்கான வாய்ப்பு கிடைத்ததற்கு நான் ஆசிர்வதிக்கப்பட்டிருக்க வேண்டும். பிட்ச்சை பார்த்த பின் நான் கேப்டனிடம் பேசினேன். அதன் பின் என்ன செய்ய வேண்டும் என்பதை நாங்கள் பேசி முடிவெடுத்தோம்" என்று கூறினார்.