< Back
கிரிக்கெட்
அன்பையும், ஆதரவையும் பொழிந்த அனைவருக்கும் நன்றி - சூர்யகுமார் யாதவ்

கோப்புப்படம்

கிரிக்கெட்

அன்பையும், ஆதரவையும் பொழிந்த அனைவருக்கும் நன்றி - சூர்யகுமார் யாதவ்

தினத்தந்தி
|
20 July 2024 1:59 AM GMT

இலங்கை தொடருக்கான இந்திய டி20 அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

புது டெல்லி,

இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 27ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய ஒருநாள் அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், டி20 அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த இரு அணிகளுக்கும் சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். உலகக்கோப்பை தொடரின் போது டி20 அணிக்கு துணை கேப்டனாக செயல்பட்ட பாண்ட்யா ஒரு வீரராக டி20 அணியில் மட்டும் இடம் பிடித்துள்ளார். இந்நிலையில், இந்திய டி20 அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ள சூர்யகுமார் யாதவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது, இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்கும் என் மீது அன்பையும், ஆதரவையும், வாழ்த்துகளையும் பொழிந்த அனைவருக்கும் நன்றி. கடந்த சில வாரங்களில் நடந்த நிகழ்வுகள் எல்லாம் கனவு போல் இருக்கிறது. அதற்கு நான் நன்றி கடன்பட்டுள்ளேன்.

நாட்டுக்காக விளையாடுவது ஆகச்சிறந்த உணர்வு. அதை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. மேலும், இந்த புதிய பதவி எனக்குள் நிறைய பொறுப்பையும், உற்சாகத்தையும் கொண்டு வந்துள்ளது. தொடர்ந்து உங்கள் ஆதரவும், ஆசியும் கிடைக்கும் என்று நம்புகிறேன். எல்லாப் புகழும் இறைவனுக்கே. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மேலும் செய்திகள்