< Back
கிரிக்கெட்
டெஸ்ட் தொடர்; அது மட்டும் நடந்தா இங்கிலாந்து 5 - 0 என இந்தியாவை தோற்கடிக்கும் - இங்கிலாந்து முன்னாள் வீரர்

Image Courtesy: AFP

கிரிக்கெட்

டெஸ்ட் தொடர்; அது மட்டும் நடந்தா இங்கிலாந்து 5 - 0 என இந்தியாவை தோற்கடிக்கும் - இங்கிலாந்து முன்னாள் வீரர்

தினத்தந்தி
|
30 Jan 2024 11:33 AM IST

இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2-வது போட்டி, வரும் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 2-ம் தேதி) நடைபெற உள்ளது.

லண்டன்,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2-வது போட்டி, வரும் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 2-ம் தேதி) நடைபெற உள்ளது.

இந்நிலையில் போப் மற்றும் டாம் ஹார்ட்லி ஆகியோர் இதேபோல எஞ்சிய 4 போட்டிகளிலும் செயல்பட்டால் 5 - 0 என்ற கணக்கில் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் இங்கிலாந்து தோற்கடிக்கும் என இங்கிலாந்து முன்னாள் வீரர் மான்டி பனேசர் அதிரடி கருத்தை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது,

ஒருவேளை போப் மற்றும் டாம் ஹார்ட்லி இதேபோல தொடர்ந்து விளையாடினால் 5-0 என்ற கணக்கில் இங்கிலாந்து ஒயிட் வாஷ் செய்து கோப்பையை வெல்லும். முதல் போட்டியில் பெற்றது மிகப்பெரிய வெற்றி. யாருமே அது சாத்தியமாகும் என்று நினைக்கவில்லை.

குறிப்பாக 190 ரன்கள் பின்தங்கிய பின் இங்கிலாந்து தோற்கும் என்றே அனைவரும் நினைத்தனர். ஆனால் போப் சிறப்பான இன்னிங்ஸ் விளையாடினார். அதனால் ரோகித் சர்மா என்ன செய்வதென்றே தெரியாமல் நின்றார். அந்த வெற்றி வெளிநாடுகளில் இங்கிலாந்து பதிவு செய்த மகத்தான வெற்றிகளில் ஒன்றாகும். இது நாங்கள் உலகக் கோப்பையை வென்றது போன்ற உணர்வை கொடுக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்