< Back
கிரிக்கெட்
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இங்கிலாந்து அணி அறிவிப்பு..கடைசி போட்டியில் களமிறங்கும் ஜேம்ஸ் ஆண்டர்சன்

image courtesy: ICC 

கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இங்கிலாந்து அணி அறிவிப்பு..கடைசி போட்டியில் களமிறங்கும் ஜேம்ஸ் ஆண்டர்சன்

தினத்தந்தி
|
30 Jun 2024 7:35 PM IST

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.

லண்டன்,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இரு அணிகளுக்கான முதலாவது டெஸ்ட் போட்டி ஜூலை 10-ம் தேதி ஆரம்பமாக உள்ளது.

இந்நிலையில் இந்த தொடரில் முதல் 2 போட்டிகளுக்கான 14 வீரர்கள் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் முதல் போட்டியில் மட்டும் இடம்பெற்றுள்ளார். ஏற்கனவே ஓய்வை அறிவித்து விட்ட அவருக்கு இது கடைசி டெஸ்ட் போட்டியாகும்

இங்கிலாந்து அணி விவரம் பின்வருமாறு:-

பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேம்ஸ் ஆண்டர்சன், கஸ் அட்கின்சன், சோயிப் பஷீர், ஹாரி புரூக், ஜாக் க்ராலி, பென் டக்கெட், டான் லாரன்ஸ், தில்லன் பென்னிங்டன், ஒல்லி போப், மேத்யூ பாட்ஸ், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ்.

மேலும் செய்திகள்