இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர்...பாகிஸ்தான் அணி அறிவிப்பு...!
|இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
கராச்சி,
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுவதற்காக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த சுற்றுப்பயணத்துக்கான அட்டவணை இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் ஆகும். இந்நிலையில் இந்த தொடருக்கான பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஷாகின் ஷா அப்ரிடி இடம் பிடித்துள்ளார்.
இந்த அணிக்கு பாபர் ஆசம் கேப்டனாகவும், முகமது ரிஸ்வான் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் அணி விவரம்:-
பாபர் ஆசம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (துணை கேப்டன், விக்கெட் கீப்பர்), அமீர் ஜமால், அப்துல்லா ஷபீக், அப்ரார் அகமது, ஹசன் அலி, இமாம் உல் ஹக், முமகது ஹூரைரா, முகமது நவாஸ், நோமன் அலி, சல்மான் அலி ஆகா, சர்பராஸ் அகமது (விக்கெட் கீப்பர்), சவுத் சாகீல், ஷாகின் அப்ரிடி, ஷான் மசூத்.