< Back
கிரிக்கெட்
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர்; பென் ஸ்டோக்ஸ் விலகல் - காரணம் என்ன..?

Image Courtesy: @englandcricket

கிரிக்கெட்

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர்; பென் ஸ்டோக்ஸ் விலகல் - காரணம் என்ன..?

தினத்தந்தி
|
14 Aug 2024 1:53 AM IST

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விலகி உள்ளார்.

லண்டன்,

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 21ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரின் போட்டிகள் முறையே மான்செஸ்டர், லார்ட்ஸ் (லண்டன்), கென்னிங்டன் ஓவல் (லண்டன்) ஆகிய மைதானங்களில் நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்த தொடரில் இருந்து இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் விலகி உள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இங்கிலாந்தில் நடைபெற்று வரும் தி ஹண்ட்ரெட் தொடரில் கடந்த 11ம் தேதி நடைபெற்ற ஆட்டத்தில் ஆடிய போது ஸ்டோக்ஸ்-க்கு இடது தொடையில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அவர் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக இலங்கை தொடரில் மாற்று வீரர் சேர்க்க மாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பென் ஸ்டோக்ஸ் இல்லாததால் இலங்கை தொடரில் ஆலி போப் கேப்டனாக செயல்படுவார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.



மேலும் செய்திகள்