< Back
கிரிக்கெட்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்...ருதுராஜ் கெய்க்வாட் விலகல்...காரணம் என்ன..?

Image Courtesy: @BCCI

கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்...ருதுராஜ் கெய்க்வாட் விலகல்...காரணம் என்ன..?

தினத்தந்தி
|
23 Dec 2023 3:53 PM IST

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 26ம் தேதி தொடங்குகிறது.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது. இதையடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.

இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் வரும் 26ம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் காயம் காரணமாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து ருதுராஜ் கெய்க்வாட் விலகுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியின்போது ருதுராஜுக்கு வலது கை மோதிர விரலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக இந்திய டெஸ்ட் அணியில் அபிமன்யு ஈஸ்வரன் இடம் பிடித்துள்ளார்.

மேலும் செய்திகள்