< Back
கிரிக்கெட்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்...தோனியின் சாதனையை முறியடிக்கும் முனைப்பில் ரோகித் சர்மா..!

Image Courtesy: AFP

கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்...தோனியின் சாதனையை முறியடிக்கும் முனைப்பில் ரோகித் சர்மா..!

தினத்தந்தி
|
25 Dec 2023 7:23 PM IST

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அதிக சிக்சர் அடித்தவர்கள் பட்டியலில் சேவாக் முதல் இடத்தில் உள்ளார்.

செஞ்சூரியன்,

தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது. ஒருநாள் தொடரை 2-1 என இந்திய அணி கைப்பற்றியது.

இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை தொடங்க உள்ளது. இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடரின் போது இந்திய அணியின் கேப்டனாக செயல்பட இருக்கும் ரோகித் சர்மா சில முக்கிய சாதனைகளை படைக்க காத்திருக்கிறார் என்பது குறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த வகையில் தற்போது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி இந்த தொடரை கைப்பற்றும் பட்சத்தில் தென் ஆப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய முதல் இந்திய கேப்டனாக ரோகித் சர்மா சாதனை படைப்பார்.

மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அதிக சிக்ஸ் அடித்தவர்கள் பட்டியலில் தோனி (78 சிக்ஸ்) 2ம் இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் ரோகித் (77 சிக்ஸ்) 3ம் இடத்தில் உள்ளார். இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரோகித் இன்னும் இரண்டு சிக்ஸர்களை அடிக்கும் பட்சத்தில் அவர் தோனியை பின்னுக்குத் தள்ளி டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்களை அடித்த இந்திய வீரராக இரண்டாம் இடத்தை பிடிப்பார்.

மேலும் ரோகித் சர்மா இந்த தொடரில் 13 சிக்ஸர்களுக்கு மேல் விளாசினால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்களை அடித்த இந்திய வீரராக இருக்கும் சேவாக்கின் (90 சிக்ஸ்) சாதனையையும் முறியடிப்பார்.

மேலும் செய்திகள்