< Back
கிரிக்கெட்
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இலங்கை அணி அறிவிப்பு

image courtesy: ICC

கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இலங்கை அணி அறிவிப்பு

தினத்தந்தி
|
16 Sept 2024 3:35 PM IST

இலங்கை - நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 18-ம் தேதி தொடங்க உள்ளது.

வெலிங்டன்,

இலங்கை கிரிக்கெட் அணி அதன் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 18-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடர் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்நிலையில் இந்த தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டி சில்வா தலைமையிலான அந்த அணியில் மேத்யூஸ், கருணாரத்னே போன்ற அனுபவ வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இலங்கை அணி விவரம் பின்வருமாறு:-

தனஞ்சய டி சில்வா (கேப்டன்), திமுத் கருணாரத்னே, பதும் நிசாங்கா, குசல் மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ், தினேஷ் சன்டிமால், கமிந்து மெண்டிஸ், சதீர சமரவிக்ரமா, ஓஷடா பெர்னாண்டோ, அசிதா பெர்னாண்டோ, விஷ்வா பெர்னாண்டோ, லஹிரு குமரா, பிரபாத் ஜெயசூர்யா, ரமேஷ் மெண்டிஸ், ஜேப்ரி வாண்டர்சே மற்றும் மிலன் ரத்னாயகே.

மேலும் செய்திகள்