< Back
கிரிக்கெட்
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்; அட்டவணையை வெளியிட்ட இலங்கை

Image Courtesy: @ICC

கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்; அட்டவணையை வெளியிட்ட இலங்கை

தினத்தந்தி
|
23 Aug 2024 1:54 PM IST

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது.

கொழும்பு,

இலங்கை கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடர் நிறைவடைந்ததும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.

இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் ஆகும். இந்நிலையில் இந்த தொடருக்கான அட்டவணையை இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. இந்த தொடரின் இரண்டு போட்டிகளும் காலேவில் நடைபெறுகின்றன.

முதல் போட்டி செப்டம்பர் 18ம் தேதி முதல் 23ம் தேதி வரையும், 2வது போட்டி செப்டம்பர் 26ம் தேதி முதல் 30ம் தேதி வரையும் நடைபெறுகின்றன. வழக்கமாக ஒரு டெஸ்ட் போட்டி 5 நாட்கள் மட்டுமே நடைபெறும். இந்த 5 நாட்களுக்குள் முடிவு எட்டப்படாவிட்டால் போட்டி டிரா ஆனதாக அறிவிக்கப்படும்.

ஆனால் இலங்கை - நியூசிலாந்து இடையிலான முதல் போட்டிக்கு 6 நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் செப்டம்பர் 21ம் தேதி ஓய்வு நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு காரணம் என்னவெனில் செப்டம்பர் 21ம் தேதி இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதன் காரணமாக செப்டம்பர் 21ம் தேதி ஓய்வு நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்