நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்; புது கேப்டன் தலைமையில் களம் இறங்கும் தென் ஆப்பிரிக்கா..!
|தென் ஆப்பிரிக்க கிரிக்கெ அணி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது.
கேப்டவுன்,
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி தற்போது இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடருக்கு பின் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.
இந்நிலையில் இந்த தொடருக்கான தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் பிப்ரவரி 4ம் தேதி தொடங்குகிறது. அந்த அணிக்கு நெய்ல் பிராண்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த தொடர் நடைபெறும் சமயத்தில் தென் ஆப்பிரிக்காவில் எஸ்.ஏ. 20 தொடர் நடைபெற உள்ளதால் சீனியர் வீரர்கள் இந்த தொடரில் இடம் பெறவில்லை.
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி விவரம்;
நெய்ல்பிராண்ட் (கேப்டன்), டேவிட் பெட்டிங்ஹாம், ருவான் டி ஸ்வார்ட், க்ளைட் போர்டுயின், ஜுபைர் ஹம்சா, ட்ஷெபோ மோரேகி, மிஹலாலி மபோங்வானா, டுவான் ஆலிவியர், டேன் பேட்டர்சன், கீகன் பீட்டர்சன், யேன் பீட், ரெய்னார்ட் வான் டோண்டர், ஷான் வாக் பெர்க், காயா சோண்டோ.