நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இங்கிலாந்து அணி அறிவிப்பு - மீண்டும் அணிக்கு திரும்பிய நட்சத்திர வீரர்..!
|பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் இடம் பெறாத நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் அணியில் மீண்டும் இடம் பிடித்துள்ளார்.
லண்டன்,
பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு அந்த நாட்டுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றிய இங்கிலாந்து அணி அடுத்ததாக அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடுகிறது.
இதையடுத்து அந்த அணி பிப்ரவரி மாதம் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. அந்த இரு டெஸ்ட் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் சுற்றுப்பயனத்தில் மிகச்சிறப்பாக செயல்பட்ட ஹாரி புரூக், ஜாக் க்ராவ்லி, பென் டக்கட் ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர். பாகிஸ்தான் அணிக்கு எதிரான அறிமுக போட்டியில் சிறப்பாக பந்து வீசி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த சுழற்பந்து வீச்சாளர் ரெஹான் அகமது இந்த அணியில் இடம் பெறவில்லை.
பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் இடம் பெறாத நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் அணியில் மீண்டும் இடம் பிடித்துள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி விவரம்:-
பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், ஹாரி புரூக், ஜாக் க்ராவ்லி, பென் டக்கட், பென் போக்ஸ், வில் ஜாக்ஸ், டான் லாரன்ஸ், ஜேக் லீச், ஓலி போப், மேத்யூ பாட்ஸ், ஓலி ராபின்சன், ஜோ ரூட், ஓலி ஸ்டோன்.
முதல் டெஸ்ட்: பிப்ரவரி16-20 (2023)
2வது டெஸ்ட்: பிப்ரவரி 24-28 (2023)