நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்; முதற்கட்ட அணியை அறிவித்த ஆப்கானிஸ்தான்
|நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான முதற்கட்ட அணியில் ரஷீத் கான் இடம் பெறவில்லை.
காபூல்,
நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் உத்தர பிரதேசத்தில் உள்ள கிரேட்டர் நொய்டாவில் அடுத்த மாதம் 9ம் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில் இந்த தொடருக்கான 20 பேர் கொண்ட முதற்கட்ட அணியை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த அணி நாளை இந்தியாவுக்கு வரவுள்ளது. இந்தியாவில் ஒருவாரம் பயிற்சி மேற்கொள்ளும் முதற்கட்ட அணியிலிருந்து வீரர்களின் செயல்பாடு மற்றும் உடற்தகுதியை கருத்தில் கொண்டு இறுதி அணி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முதற்கட்ட அணியில் ஆப்கானிஸ்தானின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அணிக்கு ஹஷ்மத்துல்லா ஷாஹிதி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் முதற்கட்ட அணி விவரம்;
ஹஸ்மத்துல்லா ஷாஹிதி (கேப்டன்), இப்ராகிம் ஜட்ரான், ரியாஸ் ஹசன், அப்துல் மாலிக், ரஹ்மத் ஷா, பஹீர் ஷா மஹ்பூப், இக்ராம் அலிகெல் (விக்கெட் கீப்பர்), ஷாஹிதுல்லா கமால், குல்பாடின் நைப், அப்சர் ஜசாய் (விக்கெட் கீப்பர்), அஸ்மத்துல்லா உமர்சாய், ஜியாவுர்ரஹ்மான் அக்பர், ஷாம்சுர்ரஹ்மான், கைஸ் அகமது, ஜாஹிர் கான், நிஜாத் மசூத், பரித் அஹ்மத் மாலிக், நவீத் சத்ரான், கலீல் அஹ்மத் மற்றும் யமா அரப்.