நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் - இந்திய அணி அறிவிப்பு
|நியூசிலாந்து 'ஏ' அணிக்கு எதிரான மூன்று 4 நாள் போட்டிகளுக்கான 16 பேர் கொண்ட இந்திய ஏ அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) நியூசிலாந்து 'ஏ' அணிக்கு எதிரான மூன்று 4 நாள் போட்டிகளுக்கான 16 பேர் கொண்ட இந்திய ஏ அணியை அறிவித்தது. இந்திய ஏ அணிக்கு பிரியங்க் பஞ்சால் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த அணியில் கேஎஸ் பாரத் மற்றும் உபேந்திர யாதவ் ஆகிய இரண்டு விக்கெட் கீப்பர்கள் உள்ளனர். சர்ஃபராஸ் கான் உள்நாட்டு சுற்றுகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் இந்த அணியில் இடம் பிடித்துள்ளார். ராகுல் சாஹர் மற்றும் குல்தீப் யாதவ் என இரண்டு லெக் ஸ்பின்னர்களும் வேகப்பந்து வீச்சாளர்களில் உம்ரான் மாலிக், பிரிசித் கிருஷ்ணா ஆகியோர் உள்ளனர்.
முதல் போட்டி செப்டம்பர்( 1- 4) , இரண்டாவது ஆட்டம் செப்டம்பர் (8-11) வரையிலும் நடைபெறும். மூன்றாவது மற்றும் கடைசி ஆட்டம் செப்டம்பர் (15-18) வரை நடைபெறும். இந்த 3 ஆட்டங்களும் பெங்களூருரில் நடைபெறுகின்றது.
நான்கு நாள் போட்டிகளுக்கான இந்திய ஏ அணி: பிரியங்க் பஞ்சால் (கேப்டன்), அபிமன்யு ஈஸ்வரன், ருதுராஜ் கெய்க்வாட், ரஜத் படிதார், சர்ஃபராஸ் கான், திலக் வர்மா, கே.எஸ்.பாரத் (விக்கெட் கீப்பர் ), உபேந்திர யாதவ் (விக்கெட் கீப்பர் ), குல்தீப் யாதவ், சவுரப் குமார், ராகுல் சாஹர், பிரசித் கிருஷ்ணா, உம்ரான் மாலிக், முகேஷ் குமார், யாஷ் தயாள், அர்சான் நாக்வாஸ்வல்லா.