< Back
கிரிக்கெட்
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்: பாகிஸ்தான் அணியில் 3 வீரர்கள் சேர்ப்பு...!

Image Courtesy: ICC Twitter

கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்: பாகிஸ்தான் அணியில் 3 வீரர்கள் சேர்ப்பு...!

தினத்தந்தி
|
25 Dec 2022 7:52 AM IST

நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது.

கராச்சி,

பாகிஸ்தான் அணி தனது சொந்த மண்ணில் நடந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 0-3 என்ற கணக்கில் இங்கிலாந்து அணியிடம் பறிகொடுத்தது. இந்த தோல்வியை அடுத்து பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் மீது பல்வேறு விமர்சனங்கள் விழுந்தது. இந்நிலையில், அதிர்ச்சி அளிக்கும் விதமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

இதையடுத்து பாகிஸ்தான் அணி நியூசிலாந்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதுவும் பாகிஸ்தான் மண்ணில் தான் நடைபெறுகிறது. இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்ததை சரிசெய்யும் வகையில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை கட்டாயம் கைப்பற்ற வேண்டும் என்ற கட்டாயத்தில் பாகிஸ்தான் அணி உள்ளது.

இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணியில் 3 வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணி விவரம்:-

பாபர் ஆசம் (கேப்டன்), அப்துல்லா ஷபீக், அபார் அகமது, ஹசன் அலி, இமாம் உல் ஹக், கம்ரான் குலாம், மிர் ஹம்சா, முகமது நவாஸ், முமகது ரிஸ்வான், முகமது வாசிம் ஜூனியர், நசீம் ஷா, நோமன் அலி, சஜித் கான், சல்மான் அலி ஆகா, சர்பராஸ் அகமது, சவுத் சகீல், ஷாநாவாஸ் தஹானி, ஷான் மசூத், ஜாகித் மெஹ்மூத்.

மேலும் செய்திகள்