இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்; ஹாரி புரூக் விலகல் - காரணம் என்ன..?
|இந்தியாவுக்கு வருகை தந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.
லண்டன்,
இந்தியாவுக்கு வருகை தந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 25ம் தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது.
இந்நிலையில் இந்த தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம் பெற்றிருந்த அதிரடி ஆட்டக்காரர் ஹாரி புரூக் தொடரில் இருந்து விலகி உள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் விலகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தொடரில் இருந்து விலகிய ஹாரி புரூக்கிற்கு பதிலாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்னும் மாற்று வீரரை அறிவிக்கவில்லை.
இந்திய டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி விவரம்;
பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ரெஹான் அகமது, ஜேம்ஸ் ஆண்டர்சன், கஸ் அட்கின்சன், ஜானி பேர்ஸ்டோ (விக்கெட் கீப்பர்), ஷோயப் பாஷிர், ஜேக் க்ராவ்லி, பென் டக்கட், பென் போக்ஸ், டாம் ஹார்ட்லே, ஜேக் லீக், ஓலி போப், ஓலீ ராபின்சன், ஜோ ரூட், மார்க் வுட்.