< Back
கிரிக்கெட்
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்; ஹாரி புரூக்கிற்கு பதிலாக மாற்று வீரரை அறிவித்த இங்கிலாந்து

Image Courtesy: AFP

கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்; ஹாரி புரூக்கிற்கு பதிலாக மாற்று வீரரை அறிவித்த இங்கிலாந்து

தினத்தந்தி
|
21 Jan 2024 8:35 PM IST

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.

லண்டன்,

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 25ம் தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது.

இந்நிலையில் இந்த தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம் பெற்றிருந்த அதிரடி ஆட்டக்காரர் ஹாரி புரூக் தொடரில் இருந்து விலகி உள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருந்தது. தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் விலகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகிய ஹாரி புரூக்கிற்கு பதிலாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மாற்று வீரரை தற்போது அறிவித்துள்ளது. அதன்படி டேன் லாரன்ஸ் ஹாரி புரூக்கிற்கு பதிலாக மாற்று வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார்.


மேலும் செய்திகள்