< Back
கிரிக்கெட்
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு...!

Image Courtesy: ICC Twitter 

கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு...!

தினத்தந்தி
|
11 Jan 2023 2:38 PM IST

இந்தியாவுக்கு எதிராக 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ள ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

மெல்போர்ன்,

இலங்கை அணிக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாடி வரும் இந்திய அணி அடுத்ததாக நியூசிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் ஆடுகிறது. இதையடுத்து இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் சொந்த மண்ணில் ஆடுகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு முன்னேற இந்த தொடரை கட்டாயம் கைப்பற்றியே ஆக வேண்டும் என இக்கட்டான சூழ்நிலையில் இந்திய அணி களம் இறங்க உள்ளது. இந்த தொடர் பிப்ரவரி 9 அன்று தொடங்குகிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

18 பேர் கொண்ட குழுவிற்கு பேட் கம்மின்ஸ் கேப்டனாக நியமிக்கபட்டுள்ளார். துணை கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி விவரம்:-

பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஆஷ்டன் அகர், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் க்ரீன், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், ஜோஷ் ஹேஸ்லேவுட், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஸ்சாக்னே, நாதன் லயோன், லேன்ஸ் மோரிஸ், டாட் மர்பி, மேத்யூ ரென்ஷா, ஸ்டீஸ் ஸ்மித் (துணை கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், மிட்செல் ஸ்வெப்சன், டேவிட் வார்னர்.

முதல் டெஸ்ட்: பிப்ரவரி (9-13)

2வது டெஸ்ட்: பிப்ரவரி (17-21)

3வது டெஸ்ட்: மார்ச் (1-5)

4வது டெஸ்ட்: மார்ச் (9-13).



மேலும் செய்திகள்