< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்; முதல் இரு போட்டிகளில் இருந்து விலகிய விராட் கோலி - காரணம் என்ன..?
|22 Jan 2024 3:51 PM IST
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.
புதுடெல்லி,
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடரின் முதலாவது போட்டி வரும் 25ம் தேதி ஐதரபாத்தில் தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் இரு போட்டிகளுக்கான இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது.
அந்த அணிக்கு ரோகித் கேப்டனாகவும், பும்ரா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டிருந்தனர். அந்த அணியில் சீனியர் வீரரான விராட் கோலி இடம் பெற்றிருந்தார். இந்நிலையில் முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விராட் கோலி விலகி உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
தனிப்பட்ட காரணங்களுக்காக விராட் கோலி முதல் இரு போட்டிகளில் இருந்து விலகி உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. விராட் கோலிக்கு பதிலாக மாற்று வீரர் பின்னர் அறிவிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.