< Back
கிரிக்கெட்
இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இங்கிலாந்து முன்னாள் வீரர் நியமனம்

image courtesy: AFP

கிரிக்கெட்

இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இங்கிலாந்து முன்னாள் வீரர் நியமனம்

தினத்தந்தி
|
13 Aug 2024 6:57 PM IST

இங்கிலாந்து - இலங்கை இடையிலான டெஸ்ட் தொடர் வரும் 21-ம் தேதி தொடங்க உள்ளது.

கொழும்பு,

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 21-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்த தொடருக்கான இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இங்கிலாந்து முன்னாள் வீரர் இயன் பெல் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது அனுபவம் நிச்சயம் இலங்கை அணிக்கு கை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஏனெனில் இங்கிலாந்து அணிக்காக 118 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், அதில் 22 சதங்களுடன் 7727 ரன்கள் குவித்துள்ளார்.

மேலும் செய்திகள்