< Back
கிரிக்கெட்
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்; விக்கெட் கீப்பர் பொறுப்பில் இருந்து ராகுல் விடுவிப்பு - வெளியான தகவல்..!

Image Posted on Twitter By @KL_Adarsh01

கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்; விக்கெட் கீப்பர் பொறுப்பில் இருந்து ராகுல் விடுவிப்பு - வெளியான தகவல்..!

தினத்தந்தி
|
14 Jan 2024 10:59 AM IST

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.

மும்பை,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர், வரும் 25-ம் தேதி தொடங்குகிறது. முதல் ஆட்டம் ஐதராபாத்தில் நடைபெற உள்ளது.

இந்த தொடரின் முதல் இரு போட்டிகளுக்கான இந்திய அணி இரண்டு நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான உத்தரபிரதேசத்தை சேர்ந்த துருவ் ஜூரல் இடம் பெற்றுள்ளார்.

இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பராக செயல்படமாட்டார் எனவும் அவர் ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமே விளையாட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ராகுல் விக்கெட் கீப்பராக செயல்பட்டதால் இந்த தொடரிலும் அவர்தான் விக்கெட் கீப்பராக செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் உள்ள மைதானங்கள் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் விக்கெட் கீப்பிங் பணி கடினமாக இருக்கும். எனவே ராகுலுக்கு பதிலாக முழுநேர விக்கெட் கீப்பராக கே.எஸ்.பரத் அல்லது துருவ் ஜூரல் ஆகிய இருவரில் ஒருவர் விக்கெட் கீப்பிங் பணியை கவனிப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்