கிரிக்கெட்
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்; பாகிஸ்தான் அணி அறிவிப்பு

Image Courtesy: AFP 

கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்; பாகிஸ்தான் அணி அறிவிப்பு

தினத்தந்தி
|
25 Sept 2024 7:54 AM IST

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டிக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

கராச்சி,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் அடுத்த மாதம் 7ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரின் முதல் இரு போட்டிகள் முல்தானிலும், 3வது போட்டி ராவல்பிண்டியிலும் நடைபெற உள்ளது.

முதல் போட்டி அக்டோபர் 7-11 வரையிலும், 2வது போட்டி அக்டோபர் 15-19 வரையிலும், 3வது போட்டி அக்டோபர் 24-28 வரையிலும் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டிக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணிக்கு ஷான் மசூத் கேப்டனாகவும், சவுத் ஷகீல் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். முகமது ரிஸ்வான் மற்றும் சர்பராஸ் அகமது ஆகியோர் விக்கெட் கீப்பரகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

முதல் டெஸ்ட் போட்டிக்கான பாகிஸ்தான் அணி விவரம்:

ஷான் மசூத் (கேப்டன்), சவுத் ஷகீல் (துணை கேப்டன்), அமீட் ஜமால், அப்துல்லா ஷபீக், அப்ரார் அகமது, பாபர் அசாம், மிர் ஹம்சா, முகமது ஹூரைரா, முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), நசீம் ஷா, நோமன் அலி, சைம் அயூப், சல்மான் அலி ஆஹா, சர்பராஸ் அகமது (விக்கெட் கீப்பர்), ஷாகின் ஷா அப்ரிடி.


மேலும் செய்திகள்