இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்; கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பராக செயல்பட மாட்டார் - ராகுல் டிராவிட் பதில்
|இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 25ம் தேதி தொடங்குகிறது.
ஐதராபாத்,
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 25ம் தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியாவின் விக்கெட் கீப்பராக செயல்பட்ட கே.எல்.ராகுல் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் விக்கெட் கீப்பராக செயல்பட மாட்டார் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.
இது தொடர்பாக ராகுல் டிராவிட் இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது, ராகுல் இந்த தொடரில் விக்கெட் கீப்பராக விளையாட மாட்டார். அதுபற்றி அணி தேர்விலேயே நாங்கள் தெளிவாக உள்ளோம். நாங்கள் இரண்டு விக்கெட் கீப்பர்களைத் தேர்ந்தெடுத்துள்ளோம்.
தென் ஆப்பிரிக்காவில் ராகுல் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தினார். உண்மையிலேயே அவர் சிறப்பாக விளையாடினார். தொடரை சமன் செய்ய எங்களுக்கு மிகப்பெரிய பங்காற்றினார்.
ஆனால் ஐந்து டெஸ்ட் போட்டிகளை கருத்தில் கொண்டும், இங்குள்ள சூழ்நிலையை பொறுத்தும் விக்கெட் கீப்பர் இடத்திற்கு மற்ற இரண்டு வீரர்களிடையே (கே.எஸ்.பரத் மற்றும் துருவ் ஜூரல்) போட்டி இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பராக செய்ல்பட மாட்டார் என்பதால் அந்த இடத்தில் கே.எஸ்.பரத் விளையாடுவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது எனலாம்.
இவ்வாறு கூறியுள்ளார்.