< Back
கிரிக்கெட்
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இம்பேக்ட் பீல்டர் விருது வென்ற இந்திய வீரர் யார் தெரியுமா?

image courtesy: twitter/@ICC

கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இம்பேக்ட் பீல்டர் விருது வென்ற இந்திய வீரர் யார் தெரியுமா?

தினத்தந்தி
|
10 March 2024 5:11 PM IST

ஒவ்வொரு தொடரிலும் சிறப்பாக பீல்டிங் செய்யும் இந்திய வீரருக்கு பி.சி.சி.ஐ. சார்பில் 'இம்பேக்ட் பீல்டர்’ விருது வழங்கப்படுகிறது.

மும்பை,

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இந்த தொடரின் கடைசி போட்டியிலும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி, இங்கிலாந்தை இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி கைப்பற்றி அசத்தியது.

ஒவ்வொரு தொடரிலும் சிறப்பாக பீல்டிங் செய்யும் இந்திய வீரருக்கு பி.சி.சி.ஐ. சார்பில் 'இம்பேக்ட் பீல்டர்' விருது வழங்கப்படுகிறது. அதன்படி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 'இம்பேக்ட் பீல்டர்' விருதிற்கு இந்திய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் கில் இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த விருதிற்கு 2 வீரர்கள் தேர்வு செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்த தொடரில் இருவரும் ஒரே எண்ணிக்கையிலான கேட்சுகளை பிடித்ததன் மூலம் இந்த விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இந்த விருதை பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷா வழங்கி கவுரவித்தார்.

மேலும் இந்த தொடரில் குல்தீப் யாதவிற்கும் பீல்டிங்கில் சிறப்பு பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. இதனை குல்தீப் யாதவுக்கு ஜெய் ஷா அணிவித்தார்.

மேலும் செய்திகள்