< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய அணி அறிவிப்பு எப்போது..? வெளியான தகவல்
|8 Sept 2024 9:35 PM IST
இந்தியா - வங்காளதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது.
மும்பை,
வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாட உள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது.
அதன்படி முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 19-ம் தேதி தொடங்க உள்ளது. இதற்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி நாளை அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழுவினரால் தேர்வு செய்யப்படும் இந்திய அணியில் துலீப் டிராபியில் அசத்திய இளம் வீரர்கள் இடம்பெற வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.