< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடர்; சிறந்த பீல்டர் விருதை வென்ற இரு வீரர்கள்
|2 Oct 2024 4:13 PM IST
வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா முழுமையாக கைப்பற்றியது.
புதுடெல்லி,
வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடியது. இந்த தொடரின் ஆட்டங்கள் சென்னை மற்றும் கான்பூரில் நடைபெற்றன. இந்த தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முழுமையாக கைப்பற்றியது.
இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ) ஒவ்வொரு தொடரின் முடிவிலும், அந்த தொடரில் சிறப்பாக பீல்டிங் செய்யும் வீரருக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அந்தவகையில், வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியாவின் சிறந்த பீல்டர் விருதுக்கு ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், முகமது சிராஜ் ஆகிய 4 பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டது.
இதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், முகமது சிராஜ் ஆகிய இருவரும் சிறந்த பீல்டருக்கான விருதை கூட்டாக வென்றனர். அவர்களுக்கு சிறந்த பீல்டருக்கான விருது வழங்கப்பட்டது.