ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்; தென் ஆப்பிரிக்க அணியில் கிளென்டன் ஸ்டுர்மேனுக்கு பதிலாக லிசாட் வில்லியம்ஸ் சேர்ப்பு...!
|ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட தென் ஆப்பிரிக்க அணி ஆஸ்திரேலியா செல்ல உள்ளது.
கேப்டவுன்,
டி20 உலக கோப்பையில் சாம்பியம் ஆக தகுதி உள்ள அணியாக கருதப்பட்ட தென் ஆப்பிரிக்க அணி அரையிறுதிக்கு முன்னேற நெதர்லாந்தை கட்டாயம் வென்றாக வேண்டிய சூழ்நிலையில் அதிர்ச்சி தோல்வி அடைந்து அரையிறுதிக்கு கூட முன்னேறாமல் வெளியேறியது. இதனால் அந்த அணியின் ரசிகர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர்.
இந்த தொடரை அடுத்து தென் ஆப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் டிசம்பர் ( 17-21) பிரிஸ்பேன், டிசம்பர் ( 26-30 ) மெல்போர்ன், ஜனவரி ( 4-8 ) சிட்னி உள்ளிட்ட நகரங்களில் நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்தத்தொடரில் பங்கேற்க டீன் எல்கர் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் அணியில் இடம் பெற்றிருந்த கிளென்டன் ஸ்டுர்மேனுக்கு வயிற்று பகுதியில் தசைபிடிப்பு ஏற்பட்டுள்ளதால் அணியில் இருந்து விலகி உள்ளார். அவருக்கு பதிலாக அணியில் லிசாட் வில்லியம்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.
தென் ஆப்பிரிக்க அணி விவர்ம்:-
டீன் எல்கர் ( கேப்டன் ), தெம்பா பவுமா, ஜெரால்ட் கோட்ஸி, தியூனிஸ் டி ப்ரூயின், சரேல் எர்வி, சைமன் கார்மர், மார்கோ ஜான்சன், ஹென்ரிச் கிளாசென், கேசவ் மகராஜ், லுங்கி என்கிடி, ஆன்ரிச் நார்ட்ஜே, ககிசோ ரபடா, லிசாட் வில்லியம்ஸ், ரஸ்ஸி வான் டெர் டுசென், கைல் வெர்ரையின், காயா ஜோண்டோ.