டெஸ்ட் கிரிக்கெட்: சாதனை பட்டியலில் டிராவிட், பாண்டிங்கை பின்னுக்கு தள்ளி 3-வது இடம் பிடித்த ஜோ ரூட்
|இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் ஜொ ரூட் 62 ரன்கள் அடித்தார்.
மான்செஸ்டர்,
இங்கிலாந்து - இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இலங்கை 236 ரன்களும், இங்கிலாந்து 358 ரன்களும் எடுத்தன.
இதனையடுத்து 2-வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி 89.3 ஓவர்களில் 326 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக கமிந்து மெண்டிஸ் 113 ரன்கள் குவித்தார்.
இதனையடுத்து 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் அடித்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஜோ ரூட் 62 ரன்கள் அடித்தார்.
இந்த ஆட்டத்தில் ஜோ ரூட் அடித்த அரைசதம் டெஸ்ட் வரலாற்றில் அவருடைய 64-வதாக பதிவானது. இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக அரைசதங்கள் அடித்த வீரர்களின் மாபெரும் சாதனை பட்டியலில் ரிக்கி பாண்டிங், ராகுல் டிராவிட் ஆகியோரை பின்னுக்கு தள்ளி 3-வது இடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில் முதலிடத்தில் சச்சின் டெண்டுல்கர் (68) உள்ளார்.
அந்த பட்டியல்:
1. சச்சின் டெண்டுல்கர் - 68
2. சந்தர்பால் - 66
3.ஜோ ரூட் - 64
4. ஆலன் பார்டர்/ராகுல் டிராவிட் - 63
5. பாண்டிங் - 62